ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம்: தீபா பரபரப்பு அறிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம் என்று தான் நிரூபிப்பேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

News image
Updated On :21 மார்ச் 2017, 4:32 am

தினமணி

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம் என்று தான் நிரூபிப்பேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் சந்தேக மரணத்திற்கு பிறகு அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். தொண்டர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று எனது தலைமையில் மக்கள் ஆதரவோடு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயல்பட்டு வருகிறது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிதிமுறைகளை மீறிய செயலாகும். பொதுச்செயலாளர் என்பவர் கட்சியில் உள்ள 1½ கோடி உறுப்பினர்கள், தொண்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், சசிகலா சட்டப்பேரவை உறுப்பினர்கள், தனக்கு வேண்டியவர்கள், ஆதரவாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் செல்லதக்கது அல்ல.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான் என்று வாக்காளர்கள் அங்கீகாரமளித்து என்னை வெற்றியடையச் செய்வார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எனக்கு கிடைக்கும் வெற்றியின் மூலம் இரட்டைஇலை சின்னத்தை எனக்கே சொந்தம் என்பதை நிரூபிப்பேன்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எந்த சின்னம் எனக்கு ஒதுக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று என்னை மட்டுமே ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள். எனக்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

இந்த பேராதரவை சீர்குலைத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு பின்னடைவு ஏற்படுத்த என்னுடைய அரசியல் எதிரிகள் முயற்சிக்கின்றனர். குறிப்பாக கடந்த 2 நாட்களாக திட்டமிட்டு தொண்டர்களையும் வாக்காளர்களையும் பொதுமக்களையும் குழப்பி வருகின்றனர்.

இதற்காக திட்டமிட்டு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை கலைத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதாக பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். தொண்டர்கள், பொதுமக்களும் ஆர்.கே.நகர் வாக்காளர்களும் இதை நம்பவேண்டாம்.

உங்கள் பேராதரவோடு பேரவை சிறப்பாக செயல்பட்டு எதிரிகள் ஏற்படுத்தும் தடைகளை தகர்த்தெறிந்து ஆர்.கே.நகரில் அமோக வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிர்காலத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.