புதுதில்லி: பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2096.80 கோடி தர மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வறட்சி நிலவரங்களை பார்வையிட கடந்த ஜனவரி மாதம் 22 முதல் 25 வரை நான்கு நாட்கள் மத்திய அரசினால் அமைக்கப்பட்ட குழுவானது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாய நிலங்களை பார்வையிட்டது.
பின்னர் புதுதில்லியில் மத்திய உள்துறை அமைசக்கத்திடம் அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.முன்னதாக தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.39,565 கோடியை வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால் தற்போது தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2096.80 கோடி தர மத்திய குழு பரிந்துரை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மத்திய உள்துறையின் துணைக்குழுவானது தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.1748.20 கோடி வழங்கவே பரிந்துரை செய்துள்ளது
இது குறித்து முழுமையாக ஆராய மத்திய உள்துறையின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை தில்லியில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநகாரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


