ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

3 சின்னங்கள், 3 கட்சிப் பெயர்கள்: சசிகலா, பன்னீர்செல்வம் தரப்பு சமர்ப்பிப்பு

3 சின்னங்கள் மற்றும் 3 கட்சிப் பெயர்களை சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் இன்று காலை சமர்ப்பித்துள்ளனர்.

News image
Updated On :23 மார்ச் 2017, 6:27 am

தினமணி


புது தில்லி: 3 சின்னங்கள் மற்றும் 3 கட்சிப் பெயர்களை சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் இன்று காலை சமர்ப்பித்துள்ளனர்.

அதிமுக கட்சிப் பெயரும், இரட்டை இலைச் சின்னமும் முடக்கப்பட்டதை அடுத்து, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் தாங்கள் விரும்பும் 3 சின்னங்களையும், 3 கட்சிப் பெயர்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, பேட், தொப்பி, ஆட்டோ என 3 சின்னங்களில் ஏதேனும் ஒன்றையும், அதிமுக அம்மா கட்சி என்ற பெயரையும் அளிக்குமாறு சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல, 3 சின்னங்கள், 3 கட்சிப் பெயர்களை பன்னீர்செல்வம் தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.