ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மதுசூதனன் வேட்பு மனு ஏற்பு

ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2017, 11:22 am

தினமணி

ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இறுதி நாளான நேற்று மட்டும் 72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தம் 127 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆளும் கட்சியாக இருந்த அதிமுக பிளவுபட்டு, இரு அணிகளாக இத்தேர்தலில் போட்டியிடுவதால், ஆர்.கே. நகரில் கடுமையான போட்டி நிலவுகிறது. ஓரிரு நாள்களில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.