புதுதில்லி: தில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் ஒருவர் இன்று மயக்கம் அடைந்தன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வறட்சி நிவாரணம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அமைப்பானது தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து 16-ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இவர்களில் மகாராஜன் என்ற விவசாயி நேற்றில் இருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று காலை அவரை உணவு எடுத்துக் கொள்ளும் படி வலியுறுத்தியும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று நணபகல் அளவில் அவரது உடல் நிலை மோசமாகியதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கே சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


