மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

துறைச் செயலர்கள், காவல்துறை  உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் 'திடீர்' ஆலோசனை!

பல்வேறு துறை செயலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:20 am

DIN

சென்னை: பல்வேறு துறை செயலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் 'திடீர்' ஆலோசனை நடத்தினார்.

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் இன்று காலை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை ஒன்றை நடத்தினார். சமீபத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, திட்ட அமலாக்கம் குறித்து அவர்கள் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

அதன் பின்னர் தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா உள்ளிட்டோருடன் தலைமைச் செயலாளர் தனியாக ஆலோசனை நடத்தினார். விரைவில் ஆர்.கே.நகர் சட்டசபைத்தேர்தல் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனையும், விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக எழுந்த தகவல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.