மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

News image
Updated On :4 மே 2017, 5:00 am

தினமணி

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஏற்கெனவே 3 முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவரின் மனைவி ரம்யாவை நேற்று ஆஜராகும்படி வருமான வரித் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். நேற்று ஆஜராக வேண்டிய ரம்யா, அவகாசம் கேட்டதையடுத்து இன்று ஆஜரானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.