பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அனைத்துத் தொகுதிகளிலும் நீர்நிலைகள் தூர்வாரப்படும்

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் தலைமையில் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வோம் என திமுக செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை

News image
Updated On :7 மே 2017, 8:14 pm

DIN

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் தலைமையில் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வோம் என திமுக செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோதண்டராமர் கோயில் குளத்தைத் தூர்வாரும் பணிகளை அத்தொகுதி மக்களோடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது குடிநீர் பிரச்னை உள்ளது. இதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை அதிமுக அரசு எடுக்கவில்லை.
திமுக ஆட்சியின் போது, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாரி சீரமைக்கவும், மழை நீர் சேமிப்பு முறைகளும் உருவாக்கப்பட்டன.
ஆனால், இன்றைய தமிழக அரசு, நீர் நிலைகளைத் தூர்வாருவதை விட்டுவிட்டு ஆற்று மணல் கொள்ளைக்கு வழிவகுத்துள்ளது. கடந்த 1997-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, கோதண்டராமர் கோயில் குளம் ரூ.26 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கப்பட்டு, அடிப்படை பிரச்னைகளும் தீர்க்கப்பட்டன.
அனைத்துக் கோயில் குளங்கள், தனியார் ஆக்கிரமிப்பிலுள்ள நீர்நிலைகள், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்கள் ஆகியவற்றைத் தூர்வாரவேண்டும். மேலும், குடிநீர்ப் பிரச்னை குறித்து தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
அனைத்துத் தொகுதிகளிலும்...: தற்போது நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், திமுக சார்பில் வெற்றி பெற்ற 89 தொகுதிகள் உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் தலைமையில், முடிந்த வரை நீர்நிலைகளைத் தூர் வாரும் பணிகளை மேற்கொள்வோம்.
இதன் முதல் கட்டமாக, சைதாப்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் முயற்சியோடு, இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை திமுக சார்பில் தூர்வாரி, குடிநீரைச் சேமிக்கும் பணி மேற்கொள்ளப்படும். ஆளும் அதிமுக இது போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியிலேயே உள்ளனர்.
நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களை நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலால் முதலில் அதனை மேற்கொள்ளவில்லை. பிறகு, அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, பல நாள்கள் ஆகிவிட்டது.
அதன்பிறகும் சட்டப்பேரவையைக் கூட்டி மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனும் சிந்தனை இல்லாமல் இந்த ஆட்சி உள்ளது. அமைச்சரவையை அவ்வப்போது கூட்டி, மக்கள் பணிகள் குறித்து ஆலோசனை செய்யாமலும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.