வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலக் குறைவால் பெண் ஒருவர் உயிரிழந்தார். அதிர்ச்சியில், அவரது சகோதரரும் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
வேதாரண்யம் யானைக்கட்டித் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ராஜலட்சுமி (65). ராஜலட்சுமியின் சகோதரர் சுப்பிரமணியன் (55). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் ராஜலட்சுமியின் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜலட்சுமிக்கு இருதய அறுவைச் சிகிச்சை அண்மையில் செய்யப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக ராஜலட்சுமி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இதையறிந்த அவரது சகோதரர் சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இருவரது சடலங்களும் ஒரே நேரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மயானத்தில் தனித்தனியே எரியூட்டப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

