டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல்

உதகையில் 121-வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலரும் பங்கேற

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:33 pm

DIN

நீலகிரி: உதகையில் 121-வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் பேசினார்.

121-வது மலர் கண்காட்சி மிகச் சிறப்பாக அமைந்ததாகவும், 3 நாள் நடைபெறும் கண்காட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என கூறினார். மேலும், மானிய கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்த அனைத்துத் திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் நீட் நுழைவுத்தேர்வு தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அதுகுறித்து தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.