சோரியாங்குப்பம் கிராமத்தில் மதுக்கடைகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் புதிய மதுக்கடைகளை திறக்கவும், ஏற்கெனவே உள்ள கடைகளை மூட வலியுறுத்தியும் அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முற்பட்ட போது போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் அங்குள்ள மதுக்கடைகள் மீது கல் வீசி தாக்கியும் , மது கடைகளுக்கு தீ வைத்து எரித்ததனர்.
அப்போது போலீசார் போராட்டக்கார்களை தடியடி நடத்தி கலைத்தனர். அப்பகுதியில் மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர்.
வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டர்னர். இதனையடுத்து சோரியாங்குப்பம் கிராமத்தை சார்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த புகழ், ஜெகன், அமுதன், ராஜ்குமார், முருகன், ஆறுமுகம், செல்வம், அரியபாரதி, சிவானந்தம் உள்ளிட் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் வன்முறையில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள்! இபிஎஸ் விமர்சனம்

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவார்: சாய் சுதர்சன்

மேற்காசிய போரால் இந்திய விமான நிறுவனங்கள் பாதிப்பு: 10,000 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏமாற்றும் பயிற்சியாளர்: தோனி இல்லாமல் ஒரு கோப்பையைக்கூட வெல்லாத பிளெமிங்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


