கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா: தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடித விவரம்: அண்ணாவின் காலத்துக்குப் பிறகும் திமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்குக் காரணமான கருணாநிதியின் உறுதிமிக்க நிலைப்பாடு, வைரத்தின் உறுதிக்கு குறைந்தது அல்ல.
அவருடைய 94-ஆவது பிறந்த நாளில் கூடுதல் சிறப்பாக, சட்டப்பேரவைப் பணிகளுக்கான வைரவிழா ஆண்டும் இணைந்து இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. ஒரே கட்சி, ஒரே சின்னம், 13 முறை தேர்தலில் வெற்றி, 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள், தமிழகத்தில் அதிக காலம் முதல்வராகப் பணியாற்றியவர் என்ற பெருமையும் கருணாநிதிக்கே உரியது.
தமிழகத்தில் சமூக நீதி தழைத்து, இன்று 69 சதவீதம் வரை இட ஒதுக்கீடு நிலைக்க அடித்தளம் அமைத்தவர். பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதோடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றி, முறையான பயிற்சி அளித்தவர்.
திருநங்கைகள் என மூன்றாம் பாலினருக்கு அங்கீகாரம் அளித்தவர். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்களால் பயன் கிடைக்கச் செய்ததில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியவர்.
அதனால்தான் அவரது சட்டப்பேரவை வைரவிழாவுக்கு மதச் சார்பின்மையிலும், சமூக நீதியிலும் அக்கறையுள்ள தேசியத் தலைவர்கள் அவருடைய பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி சென்னை வருகின்றனர். அந்த நாளில் கட்சித் தொண்டர்களும் சென்னை வரவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...