பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கருணாநிதியை சந்திக்க வர வேண்டாம்: திமுக தலைமை

உடல் நலத்தின் காரணமாக கருணாநிதியை அவரது பிறந்த நாளன்று சந்திக்கத் தொண்டர்கள் வர வேண்டாம் என்று திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

News image
Updated On :30 மே 2017, 8:32 pm

DIN

உடல் நலத்தின் காரணமாக கருணாநிதியை அவரது பிறந்த நாளன்று சந்திக்கத் தொண்டர்கள் வர வேண்டாம் என்று திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: 80 ஆண்டு காலமாக பொதுவாழ்வில் பங்கேற்று வரும் கருணாநிதி உடல்நலன் குன்றி, தொடர் சிகிச்சையால் ஓய்வில் இருப்பதை அனைவரும் நன்கறிவர். மருத்துவர்களின் அக்கறை மிகுந்த சிகிச்சையினால் கருணாநிதி உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பிறந்த நாளன்று அவரை நேரில் காணும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்திடும் என்ற எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்து வந்தனர்.
ஆனால், அவருக்கு இன்னும் சிறிதுகாலம் ஓய்வு தேவை என்றும், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பார்வையாளர்களைச் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே, அவர் முழு உடல்நலம்பெற திமுக தொண்டர்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர் விரைந்து நலன் பெற உறுதுணை செய்யும் வகையில், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பதே அவருக்குத் தரக்கூடிய சிறந்த பிறந்தநாள் பரிசு என்பதை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
வாழ்த்துக்கூற தனி இணையதளம்
திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற தனி இணையதளத்தை அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
94-ஆவது பிறந்த நாள் விழாவை கருணாநிதி ஜூன் 3-ஆம் தேதி கொண்டாட உள்ளார். அவருக்கு அனைவரும் வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில்
www.wishthalaivar.com என்ற இணையதளத்தை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் வாழ்த்துச் செய்தியையும் ஸ்டாலின் பதிவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் பங்கேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.