சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜெயலலிதா இருந்த போது நாங்கள் ஜீரோ: அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நாங்கள் அனைவரும் ஜீரோதான் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

புதுதில்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நாங்கள் அனைவரும் ஜீரோதான் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முடக்கப்பட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெரும் பொருட்டு, அதிமுகவின் இரு அணிகளும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுக அம்மா அணி சார்பாக 70 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக அம்மா அணி வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இரு அணிகள் இணைப்பை பொறுத்தவரை அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்தால் நாங்கள் தேர்தல் ஆணையத்தில் தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வோம். நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்காக பசுமாடுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை பொறுத்த வரை மத்திய அரசு பொதுமக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு யாருக்கும் பயன்படாது. தமிழக அரசின் கருத்தை மத்திய அரசிடம் தெரியப்படுத்துவோம் ஜல்லிக்கட்டு விவகாரத்தை எப்படி கையாண்டோமோ அப்படியே இதையும் கையாளுவோம். 

அமைச்சர்களின் செயல்பாடு தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நாங்கள் அனைவரும் ஜீரோதான் என்று தெரிவித்தார். அவர் உயிருடன் இருந்த பொழுது அவரே அனைத்தையும் பார்த்துக் கொண்டார்

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.