ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் விரிசல்; புகை மூட்டத்தால் தீயணைப்பு வீரர்கள் திணறல்

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ்  கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்துக்குள் புகை மூட்டம் இருப்பதால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

News image
Updated On :31 மே 2017, 9:10 am

DIN

சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ்  கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்துக்குள் புகை மூட்டம் இருப்பதால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சென்னை சில்க்ஸ் துணிக் கடையின் கீழ் தளத்தில் பற்றிய தீ வேகமாக மேல் தளங்களுக்கும் பரவியது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கடைக்குள் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

துணிக் கடை என்பதால், தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கட்டடத்துக்குள் புகை மூட்டம் காணப்படுவதால் தீயணைப்பு வீரர்களும் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

இதற்கிடையே, தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், கட்டடத்தின் உள் பகுதிகள் இடிந்து விழுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்னும் 2 மணி நேரத்தில் தீ முழுமையாக அணைக்கப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் கட்டடத்துக்கு அருகே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்து நேரிட்ட பகுதிக்கு அருகே உள்ள கடைகளைத் திறக்கவும் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து நேரிட்ட பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

முதற்கட்ட விசாரணையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் அருகில் இருந்த டீசல் கேன் வெடித்து கடை முழுவதும் தீ பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். கட்டடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.