கார் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாவு
தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.


தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராமநாதன் (38). இவர், திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி, நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், மார்க்கம்பட்டியில் தனது உறவினர் இறந்ததை அடுத்து துக்கம் விசாரிப்பதற்காக ராமநாதன், தனது மனைவி சத்தியா (30), மகள் துவாரிகா (8), மகன் நிதின்குமார் (5) ஆகியோருடன் திருப்பூரில் இருந்து காரில் மார்க்கம்பட்டிக்கு வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தார்.
தாராபுரத்தை அடுத்த இடையன்கிணறு அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, அந்த கார் மீது எதிரே பழனியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மோதியது. இந்த விபத்தில், சத்தியா, துவாரிகா, நிதின்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த ராமநாதன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இதுகுறித்து குண்டடம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...