சரக்கு ரயில் சக்கரத்தில் புகை: நடுவழியில் நிறுத்தம்

வேலூர் அருகே சரக்கு ரயில் சக்கரத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட புகையால் நடு வழியில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. மாற்றுப் பாதையில் எஞ்சிய ரயில்கள் திருப்பி விடப்பட்டன.
பழுது காரணமாக லத்தேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்.
பழுது காரணமாக லத்தேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்.
Updated on
1 min read

வேலூர் அருகே சரக்கு ரயில் சக்கரத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட புகையால் நடு வழியில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. மாற்றுப் பாதையில் எஞ்சிய ரயில்கள் திருப்பி விடப்பட்டன.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சரக்கு ரயில் வியாழக்கிழமை காலை லத்தேரி ரயில் நிலையம் அருகே வந்த போது, சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநர் லத்தேரி ரயில் நிலையத்தில் நிறுத்தி விட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். ரயில் நிலையத்தில் மாற்றுப் பாதை இருப்பதால் அவ்வழியாகச் செல்ல வேண்டிய பாசஞ்சர், விரைவு ரயில்கள் திருப்பி விடப்பட்டதால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இதையடுத்து அங்கு சென்ற ரயில்வே ஊழியர்கள் சக்கரத்தில் ஏற்பட்ட பழுதைச் சரி செய்தனர். பின்னர், 3 மணி நேரத்துக்குப் பிறகு சரக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com