எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 8:57 am

DIN

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிளாளிகளான பார்த்திபன் மகள் பாவனா (10), மூர்த்தி மகள் யுவஸ்ரீ (8) ஆகியோர் புதன்கிழமை பிற்பகலில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து சம்மந்தப்பட்ட மின் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.