2 சிறுமிகள் உயிரிழப்புக்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம், இழப்பீடு தீர்வாகாது: தமிழிசை சௌந்தரராஜன்
2 சிறுமிகள் உயிரிழப்புக்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம், இழப்பீடு தீர்வாகாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


2 சிறுமிகள் உயிரிழப்புக்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம், இழப்பீடு தீர்வாகாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிளாளிகளான பார்த்திபன் மகள் பாவனா (10), மூர்த்தி மகள் யுவஸ்ரீ (8) ஆகியோர் புதன்கிழமை பிற்பகலில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
2 சிறுமிகள் இறப்பு சம்பத்துக்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம், இழப்பீடு தருவது தீர்வாகாது. பழுதடைந்த நிலையிலுள்ள மின்பெட்டிகளை உடனே சீரமைக்க வேண்டும். அரசு எடுத்த நடவடிக்கையால் சில இடங்களில் தண்ணீர் தேங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...