சென்னை: அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று சென்னையில் இன்று நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் கமல் பேசியுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
பொதுவாக இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது. பேரழிவு வரும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டுமா? வரும் முன் காக்கும் நிலை வர வேண்டும்.
எப்பொழுதும் தமிழக நலன்களுக்காக நான் என் ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். தமிழகத்துக்காக கையேந்துவதில் எனக்கு எந்த வெட்கமில்லை என்று கருதுகிறேன். இதையெல்லாம் பதவிக்காக செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். பதவிக்காக நான் எப்பொழுதும் பிரச்சினைகள் பற்றிப் பேசவில்லை.
என் குடும்பத்திலும் பல இந்துக்கள் உள்ளனர். நான் பதவிக்காக அரசியலை கையிலெடுக்கவில்லை. நாம் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியாகத்தான் செல்போன் செயலி வர உள்ளது. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.
கட்சி தொடங்குவதற்கு பணம் தேவை என பலர் சொல்கிறார்கள். அதற்கான பணத்தை ரசிகர்கள் தந்துவிடுவர். அதனால் எனக்கு பயம் இல்லை.
நவம்பர் 7-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடத் தேவையில்லை. அது கேக் வெட்ட வேண்டிய நேரம் இல்லை. நாம் கால்வாய் வெட்ட வேண்டிய நேரம்.
இவ்வாறு அந்த நிகழ்வில் கமல் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநகாரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


