கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல்: எஸ்.வி.சேகர் கடும் தாக்கு! 

தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல் என்று திரைப்படம் மற்றும் நாடக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 நவம்பர் 2017, 7:37 am

DIN

சென்னை: தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல் என்று திரைப்படம் மற்றும் நாடக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கமல் தனது செய்கைகளின் மூலம் ஒரு மூன்றாந்தர அரசியலில் ஈடுபடுபவர் போல் நடந்து கொள்கிறார். வார இதழ் ஒன்றில் கேரள முதல்வர் பினராய் விஜயன் கேள்வி கேட்டு அதற்கு கமல் பதில் சொல்வது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. இந்து தீவிரவாதம் என்ற ஒரு தவறான கற்பித்தல் அவருக்கு இருக்கிறது.

ஹாசன் என்று பெயர் வைத்து இருப்பதாலோ என்னவோ இந்துக்களுக்கு எதிரான மனோபாவம் அவருக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.  அவர் கேரளாவுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு எல்லாம் தமிழகம் தாழ்ந்து போய் விடவில்லை.

அப்படி கமலுக்கு கேரளாதான் பிடிக்கும் என்றால் அவர் கேரளாவிலேயே போய் வாழட்டும். சிலருக்கு சிறு வயதில் இருந்தே சில விஷயங்கள் பிடிபடாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக அவை தவறு என்று ஆகி விடாது.

பொதுவாக இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. ஒழுக்கமான வாழ்க்கை என்பது நமது நடைமுறை. ஆனால் அந்த முறை தேவையில்லை; எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பவர்களுக்கு இந்து மதம் பிடிக்காது.

தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல்  கமல்  தேவையில்லாத பிரச்சினைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.