பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

யானைகள் நடமாட்டம்: சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை

கோவை மாவட்டம், வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுவதால், அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

News image
நல்லமுடி காட்சிமுனையை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டத்தில் வியாழக்கிழமை நடமாடும் யானைகள்.
Updated On :9 நவம்பர் 2017, 7:19 pm

DIN

கோவை மாவட்டம், வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுவதால், அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
வால்பாறையில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளன. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 
இவை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. தேயிலைத் தோட்டத்தில் பகல் நேரங்களிலேயே யானைகள் நடமாடுவதால், தேயிலைப் பறிக்கும் பணியும் பாதிப்படைந்து வருகிறது. 
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாகவே நல்லமுடி காட்சிமுனை, சின்னக் கல்லாறு, நீராறு அணை போன்ற பகுதிகளில் பகல் நேரங்களிலேயே யானைகள் நடமாடுவதால், பாதுகாப்பு கருதி யானைகள் வனப் பகுதிக்குள் செல்லும் வரை சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.