புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தேசிய பத்திரிகையாளர் தினம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

தேசிய பத்திரிகையாளர் தினத்தை ஒட்டி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:09 pm

DIN

தேசிய பத்திரிகையாளர் தினத்தை ஒட்டி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் பத்திரிகைத் துறை, செய்திகளை உள்ளது உள்ளபடி நடுநிலையோடு மக்களுக்குத் தெரிவிப்பதோடு, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று மக்களுக்கும், அரசுக்கும் பாலமாகத் திகழ்ந்து வருகிறது.
இத்தகைய பெருமைமிக்க பத்திரிகைத் துறையின் விழிகளாகவும் செவிகளாகவும் திகழும் பத்திரிகையாளர்களின் பணியைக் கௌரவிக்கும் தேசிய பத்திரிகையாளர் தின நாளில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பத்திரிகையாளர்களின் நலனுக்காக தமிழக அரசு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ உதவி போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமுதாயத்தின் நலனுக்காக செய்திகளை மக்களுக்கு அளிக்கும் பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.