புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

நாகையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை காலை சிறைபிடிக்கப்பட்டனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:54 pm

DIN

நாகையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை காலை சிறைபிடிக்கப்பட்டனர்.
நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டை, திடீர் குப்பத்தைச் சேர்ந்தவர் கோபால் மனைவி கிருஷ்ணவேணி (26). இவருக்குச் சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கோபால் (30), தமிழ்ச்செல்வன் (33), சிவநாதன் (35), சின்னையன் (34), பிரசாத் (30), நவீன் (20), ராமு (20), காளியப்பன் (50), கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த அறிவழகன் (33), ஜெயராமன் (55) உள்ளிட்ட 10 பேர் கடலுக்கு மீன்பிடிக்க நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை (நவ. 13) அதிகாலை புறப்பட்டனர்.
இந்த நிலையில், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களைச் சுற்றி வளைத்து, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சிறைபிடித்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.