தமிழகத்தின் 3,209 சதுர கி.மீ. பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்!

அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் உயரும் என்று பல முறை அபாய மணிகள் அடிக்கப்பட்டாலும் இதுவரை அதற்கான எந்த தடுப்பு நடவடிக்கையையும் மனித குலம் எடுக்கவில்லை.
தமிழகத்தின் 3,209 சதுர கி.மீ. பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்!
Updated on
1 min read


சென்னை: அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் உயரும் என்று பல முறை அபாய மணிகள் அடிக்கப்பட்டாலும் இதுவரை அதற்கான எந்த தடுப்பு நடவடிக்கையையும் மனித குலம் எடுக்கவில்லை.

இதற்கிடையே அடுத்த அபாய மணியும் நமக்கு மிகப் பக்கத்தில் அடிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் ஊரக திட்டவியலர்கள் தற்போது எச்சரித்திருப்பது சரியாகத் தமிழகத்தைத்தான்.

தமிழக அரசுக்கு அவர்கள் அனுப்பிய எச்சரிக்கைச் செய்தியில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 3,209.33 சதுர கி.மீ. தூரம் கடலுக்குள் மூழ்கும். அதுவும் 2100ம் ஆண்டு கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் ஒரு அங்கமான, அகமதாபாத்தில் இயங்கும் சாட்டிலைட் அப்ளிகேஷன் மையம் தயாரித்திருக்கும் அறிக்கையில் கணிக்கப்பட்டிருக்கும் தகவல் என்னவென்றால், 2100ம் ஆண்டில் கடல் நீர்மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்வதால், 231 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மாநில நெடுஞ்சாலை, 85 கிலோ மீட்டர் ரயில்வே கட்டமைப்புகள், 497 சதுர கிலோ மீட்டர் விவசாய நிலங்கள், 826 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நீர் நிலைகள் கடலுக்கு அடியில் சென்றுவிடும். எனவே துரித நடவடிக்கைத் தேவை என்று எச்சரித்துள்ளது.

ஊரக திட்டவியலாளர் ஏ. ஸ்ரீவத்சன் இது குறித்துக் கூறுகையில், இது பற்றிய மற்றொரு ஆய்வு அறிக்கையான 'ஃபியூச்சர் சீ லெவல் ரைஸ் : அஸெஸ்மென்ட் டியூ டு எஸ்எல்ஆர் பை 2050' மாநில திட்ட ஆணையத்திடன் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இதுவரை இது வெளியிடப்படவில்லை. இது மிகவும் முக்கியமான ஆவணம். இதில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால் கடல் மட்டம் உயரும் போது சென்னையில் மட்டும் 10 லட்சம் மக்கள் இடம்பெயரும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

எனவே, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கடலில் மூழ்கும் அபாயம் உள்ள நிலப்பரப்பைக் கண்டறிந்து, அவற்றில் மேலும் கட்டடமைப்புகள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சாட்டிலைட் அப்ளிகேஷன் மையம் அளித்திருக்கும் அறிக்கையில், எண்ணூர், என்டிஇசிஎல் வல்லூர், காமராஜர் துறைமுகம், எச்பிசிஎல் மற்றும் பிபீசிஎல் எண்ணெய் நிறுவனங்கள், பள்ளிக்கரணையில் சமீபத்தில் மேம்பாடு அடைந்த பகுதிகள் அபாயத்துக்குள்ளான பகுதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com