காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தபால் துறை திட்டம்: புதிய வழித்தடங்களில் சரக்குப் போக்குவரத்து

சென்னை -கோவை இடையே தொடங்கப்பட்ட, அதிக எடையுள்ள பார்சல்களை கொண்டுச் செல்லும் சரக்குப் போக்குவரத்துத் திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதை

News image
Updated On :21 நவம்பர் 2017, 8:56 pm

மு. வேல்சங்கர்

சென்னை -கோவை இடையே தொடங்கப்பட்ட, அதிக எடையுள்ள பார்சல்களை கொண்டுச் செல்லும் சரக்குப் போக்குவரத்துத் திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, சென்னை -சிவகாசி, சென்னை-பெங்களூரு இடையேயும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக தபால் துறை திட்டமிட்டுள்ளது.
தபால் துறையில் கடிதம், பதிவு தபால், விரைவு தபால், பார்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக, ஓரிடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்துக்கு பொருள்களை அனுப்பும் பார்சல் சேவையில் 35 கிலோ எடைக்குள்பட்ட குறைந்த எடையிலானப் பொருள்கள் மட்டும் அனுப்பப்பட்டு வந்தன.
அதிக எடை பார்சல் சேவை: இந்நிலையில், கூடுதல் எடைக் கொண்ட பார்சல்களை அனுப்பும் விதமாக, சென்னையில் இருந்து கோவைக்கு, முதல் சரக்கு போக்குவரத்துச் சேவை கடந்த மாதம் 9 -ஆம் தேதி (அக்.9) தொடங்கப்பட்டது. இதில், மருந்துகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை பார்சல்களாக னுப்பப்படுகின்றன. பார்சல் தொடர்பான விவரங்களை முன்னதாக பதிவு செய்து, அவை உரிய இடத்தில் சேர்க்கப்படுகின்றன. 
இத்திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை -சிவகாசிக்கு புதிய சேவை: இதையடுத்து, சென்னையில் இருந்து சிவகாசிக்கு அதிக எடைக் கொண்ட பார்சல் சேவை தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சிவகாசியில் அச்சுத் தொழில் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளதால், அதுதொடர்பான பொருள்களை எடுத்து செல்லும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவே இந்த புதிய சேவையை தபால் துறை தொடங்க முற்பட்டுள்ளது. இதற்கான சந்தை வாய்ப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை -பெங்களூரு: இதேபோல், சென்னையில் இருந்து பெங்களூரு வரை, இந்த பார்சல் சேவையை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு வட்ட தலைமை தபால் துறை தலைவர் எம். சம்பத் கூறியபோது, 'சென்னை -கோவை இடையேயான சரக்குப் போக்குவரத்துத் திட்டத்துக்கு அமோக வரவேற்பு உள்ளது. 
அக்டோபர் மாத முடிவில், இத்திட்டத்தின் மூலம் ரூ.4 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. சரக்குப் போக்குவரத்து மூலமாக, 2017 -18 -ஆம் நிதியாண்டுக்குள் ரூ.9 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது' என்றார் அவர்.
எந்தெந்த பொருள்களை அனுப்பலாம்!
அதிக எடைக் கொண்ட சரக்குப் போக்குவரத்து சேவையில் மருந்துகள், இருசக்கர வாகனங்கள், மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், பரிசுப் பொருள்கள், புத்தகங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்கள் அனுப்ப முடியும்.
சென்னை பரங்கிமலை தலைமை தபால் நிலையத்தில் உள்ள சரக்குப் போக்குவரத்து சேவை மையத்தை நேரடியாக அணுகி, சரக்குகளை அனுப்புவது தொடர்பான விவரங்களை அறியலாம். 044 -2232 5256 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் இதுதொடர்பான விவரங்களை பெறலாம். திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சரக்குகளை அனுப்புவதற்கான பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.