மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடிசை மாற்று வாரிய வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அந்த வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அதிரடி பிறப்பித்துள்ளது

News image
Updated On :28 நவம்பர் 2017, 12:43 pm

சென்னை: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அந்த வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை ஒட்டேரி பகுதியில் நீர்வழிப் பாதையினை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களை காலி செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதற்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பகுதி மக்கள் சார்பில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கானது இன்று உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக 177 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் 75 பேர் மட்டுமே அங்கு குடியேறி இருப்பதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அந்த வீடுகளை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டால் அந்த பயனாளிகளின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். அத்துடன் ரத்து செய்யப்பட்ட ஒதுக்கீடானது வேறு ஒரு பயனாளிக்கு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.