இணைய கல்விக் கழக இணையதளம் புதுப்பிப்பு

தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளம் (www.tamilvu.org) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மின் நூலகம் மற்றும் மின்னணு மடல் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
Published on
Updated on
1 min read

தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளம் (www.tamilvu.org) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மின் நூலகம் மற்றும் மின்னணு மடல் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 
மென்பொருள் தொகுப்பு: இணையக் கல்வி கழகத்தால் தமிழிணையம் மென்பொருள் தொகுப்பு என்ற புதிய தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் இணையம்-சொல்பேசி, விவசாய விவரங்கள், தொல்காப்பியத் தகவல், தமிழ்ப் பயிற்றுவித்தல், நிகழாய்வி ஆகிய 5 மென்பொருள்கள் அடங்கியுள்ளன. இந்த மென்பொருள் தொகுப்பினை தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளத்தில் இருந்து பொது மக்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தகவலாற்றுப்படை-மின் நூலகம்: தமிழ் மொழியோடு தொடர்புடைய தொல்லியல் சின்னங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள், கோயில்கள், சிற்பங்கள், நாணயங்கள் உள்ளிட்ட விவரங்களை தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆவணப்படுத்தியுள்ளது.
எழும்பூர் அருங்காட்சியகம், தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக் கூடம் போன்ற தமிழக அரசின் பிற துறைகளில் ஆவணப்படுத்திச் சேகரித்த தகவலாற்றுப்படை எனும் இணையதளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ் மின் நூலகம் எனும் இணையமும் தொடங்கப்பட்டுள்ளது. 
மின்னணு மடல்: தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மின்னணு மடல் என்ற மாதம் இருமுறை இதழ் வெளியாகவுள்ளது. இந்த மடலில் மத்திய-மாநில அரசுகளின் திட்டம், இப்போதைய தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகள், மின்னாளுமையில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com