சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அக்.17 -இல் அதிமுகவின் 46 -ஆவது ஆண்டு விழா

அதிமுகவின் 46 -ஆவது ஆண்டு விழாவையொட்டி வரும் 17 -ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:10 pm

DIN

அதிமுகவின் 46 -ஆவது ஆண்டு விழாவையொட்டி வரும் 17 -ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்து, வரும் 17 - ஆம் தேதி 46 -ஆவது ஆண்டு ஆரம்பிக்கவுள்லது. இதையொட்டி, அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் உள்ள கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு வண்ணம் பூசி கொடிகளை ஏற்றி, எம்.ஜி.ஆரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
வரும் 20 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு பொதுக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.