பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தீபாவளி பட்டாசால் சென்னையில் அகற்றப்பட்ட பட்டாசு குப்பைகள் எத்தனை டன் தெரியுமா?

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஒட்டுமொத்தமாக, சென்னை மாநகரில் காற்றில் மாசு 300 மைக்ரான் அளவுக்கு அதிகமாக 

News image
Updated On :20 அக்டோபர் 2017, 4:14 am

DIN

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஒட்டுமொத்தமாக, சென்னை மாநகரில் காற்றில் மாசு 300 மைக்ரான் அளவுக்கு அதிகமாக இருந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் மட்டும் 80 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 12 டன் குப்பைகள் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம். எதிர்பார்த்ததைவிட அதிகமான பட்டாசுகள் வெடித்ததில் காற்றில் மாசு அதிகரித்ததால் புதன்கிழமை தீபாவளி அன்று (அக்.18) இரவு சென்னையின் பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும், சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டது. புகைமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பட்டாசுகள் வெடிக்கும்போது, அதில் உள்ள காகிதங்கள் குவியல் போன்று தெருக்கள் மற்றும் சாலைகளில் காட்சி அளித்தன. அதன்படி சென்னையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 80 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் 5 ஆயிரத்து 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரம் பேர் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி 80 டன் பட்டாசுக் கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரையின்படி, கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள அபாயகரமான கழிவுகளை சேகரிக்கக்கூடிய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது கூடுதலாக 420 டன் குப்பைகள் அகற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 68 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக 12 டன் குப்பைகள் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.