பன்றிக் காய்ச்சல்: அரசு உடனே விழித்துக் கொள்ள வேண்டும்

டெங்குக் காய்ச்சல் விஷயத்தை போல் இல்லாமல், பன்றிக் காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு உடனே விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித்
பன்றிக் காய்ச்சல்: அரசு உடனே விழித்துக் கொள்ள வேண்டும்
Updated on
1 min read

டெங்குக் காய்ச்சல் விஷயத்தை போல் இல்லாமல், பன்றிக் காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு உடனே விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ள டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தவித்து வருகிறது. இந்த நிலையில், பன்றிக் காய்ச்சலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. 
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நோய்க் கண்காணிப்பு திட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள இதுதொடர்பான புள்ளி விவரங்களில், "தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 15 -ஆம் தேதி வரை 3,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்
களின் பட்டியலில் குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகம் 4 -ஆவது இடத்தில் உள்ளது.
பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தும் அளவுக்கு தற்போது தீவிரமடையவில்லை என்றாலும் கூட, வெப்பநிலை குறையும்போது இது வேகமாக பரவும் வாய்ப்புள்ளது. 
இக்காய்ச்சலைக் கண்டறிவதற்கான சோதனையை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்து கொள்ள வழி
வகை செய்யப்பட வேண்டும். 
அத்துடன் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிமை வார்டுகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் அமைக்கப்படுவதுடன், காய்ச்சலை குணப்படுத்துவதற்கான டாமி ஃப்ளு மாத்திரைகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டும். 
கேரளத்தில் டெங்குக் காய்ச்சல் தாக்க தொடங்கியபோது, அம்மாநில அரசு விழிப்புடன் செயல்பட்டதால் அங்கு நோய் பரவலும், உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு அலட்சியமாக செயல்பட்டதால்தான் நிலைமை மோசமானது. 
பன்றிக்காய்ச்சல் விஷயத்திலும் அதேபோல் உறங்கிவிடாமல் உடனடியாக விழித்துக் கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com