47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் உருவான நீர்வீழ்ச்சி

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் உருவான நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

News image
ஆம்பூர் அருகே ராள்ளக்கொத்தூர் காலனி பகுதியில் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்.
Updated On :21 அக்டோபர் 2017, 12:05 am

DIN

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் உருவான நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
ஆம்பூர் அருகே சில வாரங்களாக பெய்த பருவமழையால் வனப்பகுதியில் ஆங்காங்கே நீருற்றுகள் தோன்றி உள்ளன. கானாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் ஏரி, குளம், குட்டை, தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் நிரம்பி வருகின்றன. மிட்டாளம் ஊராட்சி, ராள்ளக்கொத்தூர் காலனிக்கு மேற்கே துருகம் கானாறு ஜர்க்கிப்பண்டை (வழுக்குப் பாறை) என்ற இடத்தில் நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக ஆம்பூர் சுற்று வட்டாரர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என திரளானோர் தினந்தோறும் அங்கு சென்று வருகின்றனர். சிலர் அங்கேயே உணவு தயாரித்து உண்டும் மகிழ்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.