எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தேதி: அடுத்த மாதம் அறிவிப்பு?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் (நவம்பர்) அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 10:34 pm

DIN

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் (நவம்பர்) அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நவம்பர் மாதம் அறிவிக்கவுள்ளது. அப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் தேதியும் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. குஜராத் மாநில தேர்தல் நடக்கும்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறக் கூடும்.
கடந்த 2016 -ஆம் ஆண்டு, தமிழகத்தில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகின. வாக்குகள் குறைந்ததற்கான காரணிகள் குறித்த ஆய்வினை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தத் தொடங்கியுள்ளது. 
தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 -ஆம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது 10 வாக்குச்சாவடிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குப் பதிவு நடந்துள்ளது. இது பற்றியும் ஆய்வு நடத்தப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.