நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்
ஆம்பூர் அருகே அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.


ஆம்பூர் அருகே அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு திடீரென நில அதிர்வு 3 முறை ஏற்பட்டது.
முதல் முறை லேசான அதிர்வும், இரண்டாவது முறை அதிக அதிர்வும் ஏற்பட்டது.
இதில், வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே விழுந்தன. 3-ஆவது முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
நில அதிர்வு ஏற்பட்டபோது பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது.
நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்து தெருக்களில் நின்றனர்.
மீண்டும் நில அதிர்வு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்லாமல் நீண்ட நேரம் தெருக்களிலேயே இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...