மெர்சல் படத்துக்கு பாஜகவின் சான்று அவசியமில்லை: சு. திருநாவுக்கரசர்
மெர்சல் படத்துக்கு பாஜகவின் சான்று அவசியமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


மெர்சல் படத்துக்கு பாஜகவின் சான்று அவசியமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இந்தப் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சு. திருநாவுக்கரசர்,
மெர்சல் படத்துக்கு தணிக்கை சான்று இருந்தால் போதும், பாஜகவிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். மெர்சலில் வரும் ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளை மக்கள் வரவேற்பதாக கூறிய அவர் நாட்டில் நிலவும் பிரச்னைகள் பற்றி சினிமாவில் காட்சி வடிவமைப்பது இயல்புதான் என்றார்.
மேலும் ராகுல்காந்தியிடம் ராஜிநாமா கடிதம் அளித்தாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் பா. சிதம்பரத்துடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...