ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இன்று மாலை தொடங்கி இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்! 

இன்று மாலை தொடங்கி இரண்டு நாட்களுக்கு சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:59 pm

DIN

சென்னை: இன்று மாலை தொடங்கி இரண்டு நாட்களுக்கு சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

சென்னைக்கு தென்மேற்கு மண்டலத்தில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு வளிமண்டல சுழற்சியானது தற்பொழுது அங்கிருந்து மெதுவாக நகர்ந்து இலங்கை கடற்கரைக்கு அருகே நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான தமிழக கடற்கரை பகுதிகளிலும் , சில உள் தமிழகப்    பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்புள்ளது.

சென்னையினைப் பொறுத்த வரை இன்று மாலை தொடங்கி இரண்டு நாட்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.