புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் இன்று 11 வது நாளாக டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை நடை பயிற்சி மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எங்கள் அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது கூறியுள்ளார். அவர் சொன்னது உண்மை என்றும், நாங்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். திமுக தரப்பில் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.