தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்: தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

News image
Updated On :2 செப்டம்பர் 2017, 3:46 am


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள தான்ரிபோரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று காலை அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் பாதுகாப்பு படையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.