மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாளை முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை புதன்கிழமை (செப்.6) முதல் வைத்திருப்பது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2017, 10:54 pm

DIN

தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை புதன்கிழமை (செப்.6) முதல் வைத்திருப்பது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அசல் வாகன ஓட்டுநர் உரிம கட்டாயத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடையை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது அசல் ஒட்டுநர் உரிமத்தை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது.
இதே போல் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஆர்.சுகுமார் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக உடன் வைத்திருக்க வேண்டுமென அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று செப்டம்பர் 5-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கேட்டு நிர்பந்தம் செய்யக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொது நல மனு மீதான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை (செப்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகனம் ஓட்டும்போது வாகன ஓட்டிகள் வைத்திருப்பது அவசியம் என்றும், அதனை வைத்திருப்பதில் என்ன சிரமம் உள்ளதென்றும் கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (செப்.8) ஒத்திவைத்தனர். இதனால், புதன்கிழமை (செப்.6) முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.