ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாளை சசிகலாவுடன் மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை, அந்த அணியின் மூன்று எம்.எல்.ஏக்கள் நாளை சந்திக்க உள்ளதற்காக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:51 pm

DIN

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை, அந்த அணியின் மூன்று எம்.எல்.ஏக்கள் நாளை சந்திக்க உள்ளதற்காக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக டிடிவி தினகரன் தலைமையிலான அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைத்துள்ள அவர்கள் முதலில் புதுச்சேரியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து இடம்மாறி தற்பொழுது கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.      

இந்நிலையில் அவர்களில் மூன்று எம்.எல்.ஏக்கள் நாளை காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை, சந்திக்க உள்ளதற்காக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளது.  

அந்த அணியின் தங்க தமிழ்செல்வன், கதிர்காமன் மற்றும் மாரியப்பன் கென்னடி ஆகிய மூவரே நாளை காலை சசிகலாவை சென்று சந்திக்கவுள்ளனர் என்று தெரிகிறது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.