எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தமிழக காவல்துறை டிஜிபி, ஆணையருடன் முதல்வர் பழனிசாமி 'திடீர்' ஆலோசனை! 

அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை ஆணையருடன் ..

News image
Updated On :11 செப்டம்பர் 2017, 7:18 am

சென்னை: அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை ஆணையருடன் 'திடீர்' ஆலோசனை நடத்துகிறார்.

தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தினை தொடர்ந்து தமிழகம்  முழுவதும் பரவலாக 'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரிக்கு அருகே பள்ளி மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல தங்களது பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு தொடர் போராட்டங்கள் மற்றும் மறியல் நடத்தி வருகிறது.  

இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

இந்நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் மற்றும் காவல்துறை ஆணையர் விஸ்வநாதனுடன்  'திடீர்' ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.