திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்ஜாமீன் கோரி மனு

நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் முன்ஜாமீன் கோரி

News image
Updated On :13 செப்டம்பர் 2017, 7:50 pm

DIN


நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், கடந்த மே மாதம் மோகனூர் அருகே உள்ள பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து சுப்பிரமணியன் எழுதிய கடிதத்தை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான பழனியப்பனின் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். அப்போது பழனியப்பன் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் பழனியப்பன் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள எம்.எல்.ஏ. பழனியப்பன் டிடிவி தினகரன் அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.