டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி!
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கையினை இழந்து விட்டதாகக் கூறி டிடிவி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அந்த மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் , ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சட்டப்பேரவையினை உடனடியாகக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அரசு மீது நம்பிக்கையிழந்து விட்டதாக அவர்கள் தெரிவித்ததற்கு விளக்கமளிக்குமாறு கோரி, சபாநாயகர் தனபால் அளித்த நோட்டிஸிற்கு பதில் அளிக்க இன்றுதான் கடைசி நாள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று காலை முதல்வர் பழனிசாமியும், சபாநாயகர் தனபாலும் ஆலோசனை செய்தனர்.
எனவே எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தவிடக் கோரி இருந்தனர்.
ஆனால் மனுவினை விசாரித்த நீதிபதி, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனிடம், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சட்டப்பேரவை செயலரிடம் ஆலோசித்து தகவல் தெரிவிக்குமாறு உத்தர விட்டனர். இதற்காக இன்று மாலை வரை அவகாசமும் வழங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...