நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் கடந்த 12-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, அதனை ரத்து செய்வதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதையடுத்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் 16-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்தார். இதனிடையே அதே தேதியில் வேறு ஒருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் டிடிவி பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி அனுமதி மறுத்தது.
இந்நிலையில், அதே திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் வருகிற 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனவே இதற்கு அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டிடிவி தினகரன் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதனா விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, திருச்சியில் செப்டம்பர் 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


