கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

நீட் தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை: உயர்நீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தமிழக அரசு புதன்கிழமை (செப்.20) பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:55 pm

DIN

நீட் தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தமிழக அரசு புதன்கிழமை (செப்.20) பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதி என்.கிருபாகரன், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் மாணவி கிருத்திகாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு முறையாகப் பின்பற்றியிருந்தால், மாணவி அனிதாவின் மரணத்தை தடுத்து இருக்கலாம் எனக்கூறி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். 
இந்த நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி , நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளன, இதில் அரசியல் கட்சியினர் எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளனர், அவை அமைதியான முறையில் நடத்தப்பட்டதா, மாணவர்கள் ஈடுபட்ட போராட்டங்கள் எத்தனை, போராட்டம் தொடர்பாக எத்தனை மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அரசியல் கட்சியினரை தவிர்த்து இந்தப் போராட்டத்தை வேறு ஏதேனும் தனியார்அமைப்புகள் தூண்டி விடுகின்றனவா, நீட் தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாகவும், அத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது தொடர்பாகவும் மாணவர்களுக்கு, தமிழக அரசு ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை, போராட்டம் காரணமாக பதிவு செய்யப்படும் வழக்குகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடாது, நீட் தேர்வுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் போன்று தமிழக மாணவர்களுக்கு கேள்விகள் வழங்கப்பட்டுள்ளதா, என்பது குறித்து புதன்கிழமையன்று (செப்.20) பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.