ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

எங்கள் நிறுவனம் பற்றி தவறான தகவல்கள் உங்களிடம் தரப்பட்டுள்ளன: ரஜினி ட்வீட்டுக்கு ஸ்டெர்லைட் பதில்

எங்களது நிறுவனத்தை பற்றி தவறான, பொய்யான தகவல்கள் உங்களுக்கு தரப்பட்டுள்ளன என்று நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் ஆலை பதிலளித்துள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2018, 9:04 am

ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என்று அதில் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஸ்டெர்லைட்டால் கேன்சர் வரும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எங்களது நிறுவனத்தை பற்றி தவறான, பொய்யான தகவல்கள் உங்களுக்கு தரப்பட்டுள்ளன என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ட்விட்டரில் பதிலளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.