6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதா நினைவிடம் அமைக்கத் தடை கோரிய வழக்குகள் தள்ளுபடி! 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கத் தடை மற்றும் அவரது படங்களை  அரசு அலுவலகங்களில் வைக்கத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

News image
Updated On :2 ஏப்ரல் 2018, 1:45 pm

DIN

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கத் தடை மற்றும் அவரது படங்களை  அரசு அலுவலகங்களில் வைக்கத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு  சென்னை மெரினா கடற்கரையில்  சமாதியில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. இதேபோல அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதும், அரசு செலவில் அவருக்கு நினைவிடம் அமைப்பதும் சட்ட விரோதம் என்று கூறி, சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் சி.குமரன் ஆகியோர் தரப்பில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஏ. செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாயன்று  விசாரணைக்கு வந்தது, அப்போது ஐந்து மனுதாரர்கள் தரப்பிலும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. எனவே ஐந்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.