மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

முழு அடைப்புப் போராட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி: மு.க. ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 12:33 pm IST


சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை மெரீனா கடற்கரையில் ஊர்வலமாகச் சென்று போராடிய மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து பெரம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. இப்படியொரு முழு அடைப்புப் போராட்டம்  தமிழகத்தில் நடைபெற்றது இல்லை என்ற அளவுக்கு போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி. 

இன்று மாலை நடைபெறுவதாக இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை காலை மீண்டும் நடைபெறும். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.