6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கைரேகை பெற்ற பொழுது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்: ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி தகவல் 

தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுக்களில் கைரேகை பெறும் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, அரசு மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் ...

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 2:57 pm

DIN

சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுக்களில் கைரேகை பெறும் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, அரசு மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அந்த ஆணையத்தில் சசிகலா தரப்பினரின் குறுக்கு விசாரணையில் மருத்துவர் பாலாஜி ஆஜராகியுள்ளார்.

குறுக்கு விசாரணையின் பொழுது  அவர் தெரிவித்த தகவல்கள் குறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:

தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுக்களில் கைரேகை பெறும் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்துள்ளார். தனக்கு அளிக்கப்பட்ட ஆவணங்கள் என்ன என்பது குறித்து கேட்டறிந்துள்ளார்.

பின்னர் அப்பல்லோ மருத்துவர் ஆப்ரஹாம் கோரிக்கையின் பேரில் கைரேகை பதிவு செய்ய ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உதவியுள்ளார்.

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்கள் 10-க்கும் மேற்பட்ட முறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் சிகிச்சை தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எங்கள் தரப்பில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்வோம்.

இவ்வாறு செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.