புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸார் உண்ணாவிரதம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறி காங்கிரஸ் சார்பில் சேப்பாக்கத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 8:50 pm

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறி காங்கிரஸ் சார்பில் சேப்பாக்கத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தலித்துகளுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுவதாகக் கூறி, அதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை (ஏப்.9) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைவர் ராகுல்காந்தி அறிவித்திருந்தார். அதன்படி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழக காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே.எம்.ஹாரூண் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் திரவியம், சிவ.ராஜேசேகரன், வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா, பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தலித் மக்களின் பாதுகாப்புக்காக காங்கிரஸ் ஆட்சியில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், அதை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாகவும் போராட்டத்தில் பங்கேற்றோர் குற்றம் சாட்டினர். பாஜக ஆட்சியில் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும் குறை கூறினர்.
கராத்தே தியாகராஜன் கைது: தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடையாறில் இருந்து சேப்பாக்கத்துக்குப் பேரணியாகச் செல்ல முற்பட்டனர். இதற்கு போலீஸார் அனுமதி தர மறுத்ததுடன், அவர்களைக் கைது செய்து மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.